- பாஜா
- மமதா பிரஷாரம்
- கொல்கத்தா
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
- மேற்கு வங்கம்
- மேற்கு வங்க சட்டமன்றம்
- மேற்கு மிட்னாபூர் மாவட்ட
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பொதுமக்களிடம் இருந்து அனைத்தையும் பாஜ பறித்துவிட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வருகிற 23 மற்றும் 29ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பிங்லா நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய மம்தா பானர்ஜி,” பாஜவை போல ஒரு மோசமான கட்சியை இதுவரை நான் பார்த்தது கிடையாது.
மக்கள் பாஜ கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். பாஜ உங்களிடம் இருந்து அனைத்தையும் பறித்துவிட்டது. அந்தக் கட்சிக்கு எதிராக நீங்கள் வாக்களிப்பதே நீங்கள் பழிதீர்த்துக்கொள்வதற்கு இருக்கும் ஒரே வழியாகும். சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறையின் கீழ் குறிப்பிடப்படும் தர்க்கரீதியான முரண்பாடு என்பது மேற்கு வங்கத்தில் மட்டும் பாஜ கட்சிக்கு சாதகமாக அமையும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது” என்றார்.
