புதுடெல்லி: டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, மொஹாலி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் திட்டங்களில் வீடு வாங்குவோரை கட்டுமான நிறுவனங்களும், வங்கிகளும், கூட்டு சேர்ந்து ஏமாற்றியது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக 8 மாநிலங்களில் 77 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். புதுடெல்லி, சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
