×

தேர்தல் பிரசாரத்தில் பாஜ, திரிணாமுல் காங். மோதல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜ, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கொல்கத்தா எண்டலி தொகுதியின் பாஜ வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இதேபோல் அதே பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்காக தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்ததாக தெரிகின்றது.

அப்போது ஒலிபெருக்கிகளில் பாடல்களை இசைப்பது தொடர்பாக இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களுக்கும் இடையே தொடங்கிய வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் பாஜ தொண்டர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாஜ வேட்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tags : BJP ,Trinamool Congress ,Kolkata ,West Bengal ,Endali ,Priyanka Dibrewal ,
× RELATED நிதிஷ்குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து...