- திரிணாமூல் காங்கிரஸ்
- ராகுல்
- மேற்கு வங்கம்
- ராய்கன்ஜ்
- ராகுல் காந்தி
- பாஜக
- ஆர்எஸ்எஸ்
- மால்டா
- மக்களவை
- மம்தா பானர்ஜி
ராய்கஞ்ச்: பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வெறுப்பு சிந்தனையின் காரணமாக அரசியலமைப்பை சிதைப்பதாக மேற்கு வங்கத்தில் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச் மற்றும் மால்டாவில் பிரசாரம் செய்த மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பேசுகையில், ”மம்தா பானர்ஜி ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால் 84லட்சம் பேர் வேலையில்லாததால் உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய இரு அமைப்புகளும் தங்கள் வெறுப்பு சிந்தனையால் அரசியலமைப்பை சிதைக்கின்றன. வாக்குத்திருட்டில் ஈடுபடுகின்றன. வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி அரசியலமைப்புக்கு முரணானது. பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ்க்கு எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் அரசியலமைப்புக்கு எதிராகவே பேசுகின்றனர்.
தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக மதம் மற்றும் சாதியின் பெயரால் ஒரு சமூகத்திற்கு எதிராக பாஜ மற்றொரு சமூகத்தை தூண்டிவிடுகின்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறப்பு தீவிர திருத்தப்பணியின்கீழ் வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்படும். நாடு முழுவதும் பாஜவை எதிர்த்து போராடும் வலிமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.
பாஜவின் முகாமிற்கு எதிராக துணிந்து நின்று அவர்களை தோற்கடிக்கக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே. திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மூடிவிட்டது. தற்போது சிண்டிகேட் முறையின் மூலமாகவே மாநிலத்தை நிர்வகித்து வருகின்றது. ஊழல் செய்வதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சற்றும் சளைத்தது கிடையாது” என்றார்.
