திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் பினராயி விஜயனின் படத்தை போட்டு அதற்கு கீழே தங்கத் திருடன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிந்த கண்ணூரை சேர்ந்த சிபிஎம் தொண்டர் சுதீர் என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவதூறு பரப்பியது கண்ணூரை சேர்ந்த அனுநந்த் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
