ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளிலும் தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடக்கம்!

 

ஈரோடு: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலையொட்டி 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி வேலூர் சட்டமன்ற தொகுதியில் தொடங்கியது. சத்துவாச்சாரி சிஎம்சி காலனியில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர் ஒருவரிடம் வாக்குப்பதிவு குழுவினர் நேரடியாக சென்று தபால் வாக்கை சேகரித்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளிலும் தபால் வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியது. வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்குசெலுத்த முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40% மேல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பெற விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Related Stories: