ராணிப்பேட்டை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
பரப்புரையில் முதல்வர் கூறியதாவது:
ராணுவப்பேட்டையாக இருந்த ராணிப்பேட்டைக்கு வந்திருக்கிறேன். ஆற்காடு சீரகச் சம்பா பிரியாணி, மக்கன் பேடா என நவாப்களின் உணவு வகைகளுக்கு பெயர் பெற்ற மாவட்டத்துக்கு வந்துள்ளேன். டெல்லி அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற உங்கள் ஆதரவை கேட்டு நான் வந்திருக்கிறேன்.
ராணிப்பேட்டையை உலகமே தற்போது வியந்து பார்க்கிறது. ராணிப்பேட்டை மாவட்ட வளர்ச்சிக்காக பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். ஒன்றிய பாஜக அரசின் தயவு இல்லாமலேயே இந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளோம். ஒவ்வொரு மாவட்டமும் வளர்ந்ததால்தான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்நாடு வளர்ந்தால் அது நாட்டுக்கு தானே வளர்ச்சி என்று பாஜக அரசு நினைத்து பார்க்கவில்லை. மொழியை அழித்தால் தமிழர் பண்பாட்டை அழிக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ரூ.2,000 கோடிக்காக தமிழர்களின் சுய மரியாதையை அடமானம் வைக்க நான் காலில் விழுந்து பதவியை வாங்கிய பழனிசாமி அல்ல. மிசாவுக்கே பயப்படாதவன் நான் அமித் ஷாவுக்கா பயப்படப் போகிறேன். என்னுடைய விசுவாசம் என்றைக்குமே தமிழ்நாட்டு மக்களுக்குத்தான்
செம்மொழியான தமிழ்மொழியை அழிக்க இந்தியை திணிக்கும் மும்மொழிக் கொள்கையை பாஜக கொண்டுவர துடிக்கிறது. மாநில உரிமைகளை பறிகொடுத்துதான் பதவி வகிக்க வேண்டுமா என்று பதவியை துறந்த கலைஞரின் மகன் நான். பழனிசாமி போல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிகவும் கீழே படுத்துள்ளது. தொகுதி மறுவரையறையை மறைத்து பாஜக செய்வதால் அதில் சதி திட்டம் உள்ளது என்று தோன்றுகிறது. தொகுதி மறுவரையறை தொடர்பான எந்த கேள்விக்கும் பாஜக பதிலளிக்கவில்லை. தொகுதி மறுவரையறை மூலம் தொகுதிகளை குறைத்து நாடாளுமன்றத்தில் நமது குரலை நசுக்கப் பார்க்கிறது பாஜக. சாதாரண மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் தேர்தல் ஆணையம், ஒன்றிய பாஜக அரசுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்காதது ஏன்..?
5 மாநில தேர்தலுக்கு இடையே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்டுகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டலாமே? ஏன் அவசரம்? தமிழ்நாட்டைவிட உத்தர பிரதேசத்துக்கு 41 தொகுதிகள் அதிகமாக உள்ளன. சாதாரண மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் தேர்தல் ஆணையம், ஒன்றிய பாஜக அரசுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்காதது ஏன்? தமிழ்நாட்டைவிட உத்தர பிரதேசத்துக்கு 41 தொகுதிகள் அதிகமாக உள்ளன. தொகுதி மறுவரையறையை கொண்டு வந்தால் இந்த வித்தியாசம் 61ஆக அதிகரிக்கும்.
குஜராத் மோடியா, இந்த லேடியா என கேள்வி எழுப்பிய ஜெயலலிதாவின் அதிமுக தற்போதைய நிலை என்ன? அம்மா, அம்மா என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டுக்கு பாதிக்கும் விஷயத்தில் இப்படி சும்மா இருக்கிறாரே எடப்பாடி? மம்மி மறைந்த பிறகு அதிமுகவை டம்மியாக்கி விட்டார் பழனிசாமி. மாநில அரசுகளை முடக்குவது, தமிழை அழிப்பதுதான் டெல்லியின் நோக்கம் என முதல்வர் கூறினார்.
