ஈரான் போரால் பாதிப்பு 13,000 வீரர்களை சவுதிக்கு அனுப்பியது பாகிஸ்தான்

லாகூர்: பாகிஸ்தான் மற்றும் சவுதி இடையே கடந்த ஆண்டு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் மற்றொரு நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஈரான், அமெரிக்க படைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், சுமார் 13,000 வீரர்கள் மற்றும் 10 முதல் 18 போர் விமானங்கள் அடங்கிய பாகிஸ்தான் ராணுவப் படை ஒன்று சவுதி அரேபியா சென்றுள்ளது.

Related Stories: