கொத்து குண்டு ஏவுகணை சோதனை நடத்தினோம்: வடகொரியா அறிவிப்பு

சியோல்: வடகொரியாக இந்த வாரம் கொத்து குண்டு பாலிஷ்டிக் ஏவுகணை உட்பட பல்வேறு புதிய ஆயுதங்களை சோதனை செய்ததாக அறிவித்துள்ளது. வடகொரியா தனது அண்டை நாடான தென்கொரியாவை இலக்காக கொண்டு அணுசக்தி திறன் கொண்ட படைகளை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக வடகொரியா பல்வேறு ஏவுகணைகளை ஏவியதாக தென்கொரிய ராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளிட்டுள்ள செய்தியில், திங்களன்று தொடங்கி மூன்று நாட்கள் நீடித்த இந்த சோதனைகளில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள், மின்காந்த ஆயுத அமைப்புகள், கார்பன் பைபர் குண்டுகளின் செயல்விளக்கங்கள், கொத்து குண்டு ஏவுகணை உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: