சியோல்: வடகொரியா இரண்டாவது நாளாக நேற்று இரண்டாவது ஏவுகணை சோதனையை நடத்தியது.
வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற தனது நம்பிக்கையை தென்கொரியா அரசு வெளிப்படுத்தியது. ஆனால் தென்கொரியாவின் அரசுடன் உறவுகளை மேம்படுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்பதை வடகெரியா தெளிவுபடுத்தியது. இதனை தொடரந்து வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வடகொரியா நேற்று கடல்பகுதியை நோக்கி பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் வொன்சான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் ஒவ்வொன்றும் கிழக்கு கடற்பகுதியில் சுமார் 240 கி.மீ.தூரம் பறந்ததாக தென்கொரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
