அதிபர் டிரம்புடன் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் சந்திப்பு

வாஷிங்டன்: சுமார் ஆறு வார கால ராணுவ மோதல்களுக்கு பின் அமெரிக்காவும், ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட அதே நேரத்தில் இந்தியாவிற்கான அமெரிக்கா தூதர் செர்ஜியோ கோர், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார். இது குறித்து செர்ஜியோ தனது எக்ஸ் தள பதிவில்,‘‘அதிபர் டிரம்புடன் ஒரு சிறப்பான இரவு உணவை உண்டேன்.

உலகளாவிய ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதில் அவரது அசைக்க முடியாத உறுதி, அவரது அதிபர் பதவிக்காலத்தின் வரலாற்று சாதனைகள், இந்தியா-அமெரிக்கா உறவுகளின் வலுவான எதிர்காலம் மற்றும் பலவற்றை குறித்து அதிபருடன் விவாதித்தேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: