நீரின்றி வறண்டது சுருளி அருவி

 

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேகமலை அருகே உள்ள ஈத்தக்காடு, அரிசிப்பாறை மற்றும் மேகமலை தூவானம் அணையில் இருந்து சுருளி அருவிக்கு நீர்வரத்து கிடைக்கிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று மாதமாக போதிய மழை இல்லாததால் சுருளி அருவிக்கு படிப்படியாக நீர்வரத்து குறைந்தது.

நீர்பிடிப்பு பகுதிகளான ஈத்தாக்காடு, அரிச்சிப்பாறை பகுதிகள் தற்போது வறண்டு காணப்படுகிறது. இதனால் சுருளி அருவி தற்போது வறண்டு காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வரும், ஏப்.14ம் தேதி சித்திரை முதல் தேதியை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளித்து மகிழவும், முன்னோர்களை நினைத்து வழிபடவும் வசதியாக தூவானம் அணையில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: