டெல்லி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. புதிதாக 6,35,911 வாக்காளர்கள் சேர்த்ததால் தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,73,43,291ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பெண்கள் 2,93,04,905, ஆண்கள் 2,80,30,658, மூன்றாம் பாலினத்தவர்கள் 7,728 வாக்களர்கள் உள்ளனர். ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என்றும்தெரிவித்துள்ளது.
