போடி பகுதியில் விளைச்சல் அமோகம் பருத்தி குவிண்டால் ரூ.7,682க்கு விற்பனை

*விவசாயிகள் மகிழ்ச்சி

போடி : போடிப் பகுதியில் கொட்டகுடி, மற்றும் பதினெட்டாம் கால்வாய் பாசனத்தில் பலதரப்பட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. போடி அருகே அம்மாபட்டி, சில்ல மரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், சின்னப்பொட்டிபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கரில் 5 மாத பயிரான பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதில் ஏசியூ 5, எம்சிஏழு, சிஓ14, சிஓ 17, எஸ்விபிஆர் 2, எஸ்விபிஆர் 6, கேசி 3, கே 12 என பருத்தி விதைகள் இந்த ரகங்களில் கிடைக்கிறது. ஜனவரியில் துவங்கிய பருத்தி விதைப்பு பயிர் படிப்படியாக வளர்த்து 4 1/2 மாதத்தை நெருங்கி தற்போது அறுவடைக்கு தயாராக நிலையில் உள்ளது.

ஆரம்பத்தில் 15வது நாளில் செடிகளாக முளைத்து அதில் மருந்தினை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பின்னர் 45 நாள் முதல் 60 நாட்களில் மீண்டும் மருந்து தெளித்து தொடர்ந்து இரண்டு முறை களைகள் பறித்து பயிரைக் காத்து தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இடை இடையே கிடைத்த சாரல் மழையால் மற்றும் குளிராலும் இந்த பயிர் ஓரளவுக்கு நன்கு விளைந்துள்ளது. ஒரு குவிண்டால் விலை ரூ.7,682 தற்போது விலையாக உயர்ந்திருக்கிறது.

இந்தப் பருத்தி நூற்பாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. வியாபாரிகள் விவசாயிகளை நேரில் சந்தித்து தற்போது இந்த பருத்தியை கொள்முதல் செய்ய முன்தொகை வழங்கி வருகின்றனர். தற்போது நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: