தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது..!!

சென்னை: தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் பரிசீலனை தொடங்கியது.  திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நா.த.க, த.வெ.க மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது. இன்று மாலை வரை வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்புமனு ஏற்கப்படும் என அறிவித்த நிலையில், மற்ற வேட்பாளர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவுபெற்ற நிலையில், மொத்தமாக 7600 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்புமனுவின் மீதான பரிசீலனையை தேர்தல் நடத்தும் அலுவலர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின் மனைவி பெயரில் உள்ள 35 நிறுவனங்கள் குறித்த விவரங்களை அவர் தனது வேட்புமனுவில் முறையாக குறிப்பிடவில்லை என கூறி, அங்கிருந்த மற்ற வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

*கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

*சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி வேட்புமனு ஏற்கப்பட்டது.

*விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வேட்புமனு ஏற்கப்பட்டது.

*நன்னிலம் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ. தலைவர் முகம்மது முபாரக் வேட்புமனு ஏற்கப்பட்டது.

*நாகையில் ஜவாஹிருல்லா, மணப்பாறையில் அப்துல் சமது வேட்புமனு ஏற்கப்பட்டது.

*பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டது. விஜய்யின் வேட்புமனுவை ஏற்றதற்கு பாமக முகவர்கள், வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

*சாத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு ஏற்கப்பட்டன.

*தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி வேட்புமனு ஏற்கப்பட்டது.

*தியாகராயர் நகர் அதிமுக வேட்பாளர் சத்யா வேட்புமனு ஏற்கப்பட்டது.

*கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு ஏற்கப்பட்டன.

*காரைக்குடி தொகுதியில் நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு ஏற்கப்பட்டது.

*திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா வேட்புமனு ஏற்கப்பட்டது.

*மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கோ.தளபதி, அதிமுக வேட்பாளர் சரவணன், நாதக உள்பட 14 பேர் மனு ஏற்கப்பட்டன.

*காரைக்குடியில் காங்கிரஸ், அமமுக, த.வெ.க வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

*துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ வேட்புமனு ஏற்கப்பட்டது.

*சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் வேட்புமனு ஏற்கப்பட்டன.

*குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேட்புமனு ஏற்கப்பட்டது.

*சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் வேட்புமனு ஏற்கப்பட்டன.

*ராயபுரம் திமுக வேட்பாளர் சுபேர்கான், தவெக வேட்பாளர் தாமு வேட்புமனு ஏற்கப்பட்டது.

*போடிநாயக்கனூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு ஏற்கப்பட்டது.

Related Stories: