சிலம்பம் சுற்றி, பலூன்கள் பறக்க விட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

*நாகை, மயிலாடுதுறையில் நடந்தது

நாகப்பட்டினம் : சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கே ற்ற சிலம்பம் சுற்றும் விழிப்புண ர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு அனைவரும் ஜனநாயக கடமையாற்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் ஸ்வீப் அமைப்பானது பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

வருகிற 23ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் புதிய கட ற்கரையில் நேற்று தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் நூறு சதம் வாக்குப்பதிவை வலியுறு த்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சிலம்பாட்டம், விழிப்புணர்வு மெகந்தி வரையும் நிகழ்ச்சி, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பலூன்களை ஏந்தி உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் சட்டமன்றத்தேர்தல்-2026 ஐ யொட்டி வாக்காளர்களுக்கு நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.உங்கள் வாக்கு உங்கள் உரிமை அதை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது.

100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும். சுயநலம் தவிர்த்து பொதுநலன் காக்க வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்து தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், டிஆர்ஓ பூங்கொடி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சீனிவாசன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: