மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் 6 ரயில்கள் தற்காலிக இடமாற்றம்

சென்னை, ஏப்.5: எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் 6 ரயில்களின் இயக்கம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (12632) நாளை முதல் 21ம் தேதி வரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக காலை 6.25 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.
 ராமேஸ்வரத்தில் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16752) நாளை முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலை 7.10 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தடையும்.
 ஐதராபாத்தில் இருந்து புறப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் (12760) இன்று முதல் சென்னை, கடற்கரை ரயில் நிலையத்திற்கு காலை 7 மணிக்கு வந்தடையும்.
 மறுமார்க்கமாக சென்னை கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) ஏப்ரல் 7 முதல் 22ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும்.
 ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் (16751) ஏப்ரல் 7 முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும்.
 ஐதராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் (12759) நாளை முதல் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில்களில் பயணிக்க திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளவும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories: