ரயில்வே பணிமனை அருகே தீ விபத்து

தாம்பரம், மார்ச் 31: தாம்பரம் ரயில்வே பணிமனை வளாகம் பின்புறத்தில் புதாரில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றில் தீப்பரவி, அப்பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு வந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். புதரில் இருந்த செடிகள் காய்ந்த நிலையில் இருந்ததால் அதிக வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது யாராவது அங்கு தீ வைத்து சென்றார்களா, என்று கோணத்தில் தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: