மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் விழா கோலாகலம்

சென்னை, மார்ச் 31: மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், 63 நாயன்மார்களுடன் காட்சியளித்த கபாலீஸ்வரரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் பங்​குனி பெரு​விழா கடந்த 23ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முதல் நாளன்று பவளக்​கால் விமானத்​தில் கபாலீஸ்​வரர் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார். அதைத்தொடர்ந்​து, அன்னை கற்​ப​காம்​பாள் மயில் வடி​வில் காட்சி தரும் அற்​புத நிகழ்​வும், சுவாமி, அம்​பாள், முரு​கப் பெரு​மான் வீதி உலா​வும் நடை​பெற்​றன. அதி​கார நந்​தி, சவுடல் விமானம் உள்​ளிட்ட பல்​வேறு வாக​னங்​களில் சுவாமி மாட வீதி​களில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு காட்​சி​யளித்​தார்.

இந்​நிலை​யில், பங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களில் ஒன்​றான தேரோட்​டம் நேற்று முன்தினம் விமரிசையாக நடை​பெற்​றது. 96 அடி உயரம், 300 டன் எடைகொண்ட பிர​மாண்​ட தேரில் கபாலீஸ்​வரர், கற்​ப​காம்பாள் காலை 6 மணிக்கே எழுந்​தருளினர். 6.30 மணி அளவில் பக்​தர்​கள் வடம் பிடிக்க, தேரோட்​டம் தொடங்​கியது. அலைகடலெனத திரண்​டிருந்த பக்​தர்​கள் ‘சம்போ மகாதே​வா’ என்ற முழக்​கத்​துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சிவ வாத்​தி​யங்​கள் முழங்க, நான்கு மாட​வீ​தி​களி​லும் கம்​பீர​மாக அசைந்​தாடி வந்த தேர் காலை 11 மணியளவில் நிலையை வந்​தடைந்​தது. 1,000க்​கும் மேற்​பட்ட போலீ​சார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்டனர். அதை தொடர்ந்து விழாவின் 8ம் நாளான நேற்று பிரசித்தி பெற்ற அறுபத்து மூவர் விழா நடைபெற்றது.

அறுபத்து மூவர் விழா என்பது சிவபெருமானின் 63 தீவிர பக்தர்களான நாயன்மார்களைக் கவுரவிக்கும் ஒரு ஆன்மிக நிகழ்வாகும். கபாலீஸ்வரரை நோக்கியவாறு, நாயன்மார்களின் பல்லக்குகள் பின்னோக்கி நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இது அடியார்கள் இறைவனைப் பணிந்து செல்வதைக் குறிக்கிறது. கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் ஆகியோருடன் 63 நாயன்மார்களின் வெண்கலச் சிலைகளும் பல்லக்குகளில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. இந்த ஊர்வலத்தில் மயிலாப்பூரின் மற்ற தெய்வங்களான கோலவிழி அம்மன், முண்டகக்கண்ணி அம்மன் மற்றும் திருவள்ளுவர் வாசுகி சிலைகளும் கொண்டு வரப்பட்டது.

மேலும், நேற்று திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பித்ததைக் கூறும் நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு பார் வேட்டைக்குச் சந்திரசேகரர் எழுந்தருளும் நிகழ்ச்சியும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றது. வெள்ளி விமானத்​தில் சிவபெரு​மான் 63 நாயன்​மார்​களோடு வலம் வரும் காட்​சி​யைக்காண, சென்னை, புறநகர் பகு​தி​கள் மட்​டுமன்றி பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்​தும் ஏராள​மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அறுபத்து மூவர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தினகரன் நாளிதழ் சார்பில் உணவுகள், தண்ணீர் பாட்டில் மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.

அதைப்போன்று தனி​யார் அமைப்​பு​கள், தன்​னார்​வலர்​கள் சார்​பில் மாட வீதி​களில் பந்​தல்​கள் அமைத்​து, பக்​தர்​களுக்கு உணவு, பிஸ்கட் பாக்கெட், நீர்​மோர், பானகம் உள்​ளிட்​டவை வழங்​கப்​பட்​டன. இதைத் தொடர்ந்​து நாளை இரவு 8.30 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம், வரும் 3ம் தேதி விழா நிறைவுத் திருமுழுக்கு (தீர்த்​த​வாரி) நடைபெறுகிறது. ஏப்ரல் 3ம் தேதி விடை​யாற்றி விழா உற்​சவ​மும் நடை​பெறுகிறது. மேலும் பங்குனி மாதத்தில் நடைபெறும். இதேபோல், திரு​வான்​மியூர் மருந்​தீஸ்​வரர் மற்​றும் மல்​லீஸ்​வரர் கோயில்​களி​லும் நேற்று முன்தினம் தேர்த்திரு​விழா நடை​பெற்​றது, அங்கேயும் ஏராளமான பக்​தர்​கள் கலந்​து​ கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்​தனர்​.

Related Stories: