மக்கள் மேலயும், உன் மேலயும் கான்பிடண்ட் இல்லையா? பெரிய ஹீரோ, மாஸ்ன்னு சொல்ற… அப்புறம் ஏன் 2 தொகுதில நிக்குற… விஜய்யை நார் நாராக கிழித்த சீமான்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காளப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தன்னையும் மக்களையும் நம்பாதவன் தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவான். நான் மாஸு.., நான் பிளாஸ்ட்.., நான் உச்சம்னு.., வசனம் பேசுனா மட்டும் போதுமா?. பெரிய ஹீரோன்னா தனித்து நிற்க வேண்டும். ஒரே தொகுதியில கான்பிடன்டா நிக்கணும். நம்ம வெல்லுவோம். நம்பிக்கையோட இருங்கள் என்று சொல்லிவிட்டு, உனக்கே நம்பிக்கை இல்ல.

எதுக்கு இரண்டு தொகுதிகளில் போய் நிற்க வேண்டும். இரண்டு முறை நின்று நான் தோற்று போயுள்ளேன். ஆனாலும் மூன்றாவது முறையாக தனித்து போட்டி போடுகிறேன். கட்சியில் இரண்டு தொகுதியில் நிற்க சொன்னார்கள். ஆனால் எனது கோட்பாடுபடி, ஒருவன் ஒரு பதவியில் இருந்து இன்னொரு பதவிக்கு போட்டி போடுவது ஜனநாயக துரோகம். மக்கள் விரோதம். ஒருவன் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதியில் போட்டி போடுவது மக்கள் விரோதம்.

இது எங்கள் கொள்கை. வரலாற்றில் எங்கள் அளவுக்கு யாரும் தோற்க முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தோம். யார்கிட்ட? என் ஆத்தா கிட்ட, என் அப்பா கிட்ட, என் மாமா கிட்ட, என் மச்சின கிட்ட. பெருமையாக இருக்கு தோல்வி அடைய. இன்னைக்கு வீழ்த்துவான், அடிப்பான், திட்டுவான். ஆனால், ஒருநாள் இந்த பிள்ளைகள் கொண்டாடும் காலமும் வரும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: