சேலையில் தீப்பிடித்து கருகிய பெண் சாவு

தர்மபுரி, மார்ச் 21: தர்மபுரி எஸ்வி ரோடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லதா (55). இவர் தனியார் பள்ளி ஒன்றில் நூலகராக பணியாற்றி வந்தார். கடந்த 13ம் தேதி, தனது தாயாரின் நினைவு தினத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது, விளக்கில் இருந்து சேலையில் தீ பிடித்தது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த லதா, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: