ஊத்தங்கரை, மார்ச் 23: ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பொது மேற்பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக சட்டசபை பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலை முன்னிட்டு பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஊத்தங்கரை (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள வாக்குச்சாவடிகளை, பொது மேற்பார்வையாளர் அனில்குமார் சிங் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் பொதுமக்களிடம் வாக்குச்சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது, ஊத்தங்கரை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
