சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுகிறது. மேலும், மாற்று கட்சியிலிருந்து சமீபத்தில் தவெகவில் இணைந்தோரையும் வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார். அந்த வகையில், செய்யாறு தொகுதியில் அதிமுக சீட் வழங்காததால், அங்கிருந்து விலகி தவெகவில் இணைந்த அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளராக இருந்த தூசி மோகனுக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தினால் தூசி மோகனை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்கு கழக செயலாளராக முக்கூர் சுப்பிரமணியனை நியமித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
