சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் பொற்கால ஆட்சி தொடரவேண்டும் என திராவிட வெற்றிக் கழகம் தலைவர் மல்லை சி ஏ சத்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை திராவிட வெற்றிக் கழகம் ஆதரிப்பதன் நோக்கம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ,
பேரறிஞர் அண்ணா ஆகியோரால் பண்படுத்தப்பட்ட தமிழ்நாட்டில் சாதியின் பெயரால் ,மதத்தின் பெயரால் மோதல்கள் உருவாகி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட துடிக்கும் பாசிச சனதான சக்திகள் தமிழ்நாட்டில் காலுன்றாதவாறு தடுத்து நிறுத்தும் பெரும் கடமையை பவளவிழா கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிரைவாக செய்து வருகின்றார்.
அவருக்கு தோள் கொடுத்து துணை நிற்க வேண்டிய வரலாற்று கடமை திராவிட வெற்றிக் கழகத்திற்கு உள்ளது. எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திராவிட மாடல் பொற்கால ஆட்சியின் நாயகனாக ஆட்சி தொடரவேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
