திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சோனியா நலம்பெற சிறப்பு பிரார்த்தனை

திருவள்ளூர்: அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் நலம்பெற வேண்டி வில்லிவாக்கம் வட்டார பொறுப்பாளர் அன்புக்கரசன் ஏற்பாட்டில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் காங்கை குமார் தலைமையில் வீராபுரத்தில் உள்ள பரிசுத்த நற்கருணை முதியோர் இல்லத்தில் இறைவனை பிரார்த்தனை செய்து அன்னதானம் செய்தனர்.

அப்போது காங்கை குமார் கூறும்போது, ‘’பசித்தோருக்கு உணவளிப்பது என்பது சாதாரண செயல் அல்ல, அது மிக உயர்ந்த தர்மம். அந்த தர்மத்தின் பலன் நமது அன்னை சோனியா காந்தி நலமாக திரும்பி வர வேண்டும். நாம் அளிக்கும் இந்த உணவு, நம் அன்பின் அடையாளம், நம் பிரார்த்தனையின் ஒரு வடிவம், இறைவன் கருணை கொண்டு அவர்களுக்கு விரைவில் முழு உடல்நலன் பெற்று மீண்டும் மக்களுக்காக சேவை செய்யும் வலிமையையும் உறுதியையும் வழங்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரே மனதுடன் ஒரு வேண்டுதல் விடுப்போம். நம் அன்னை விரைவில் நலம்பெற வேண்டும்’’ என்றார்.

இதில், மாநில செயலாளர் தரணிபாய், வட்டார, நகர தலைவர்கள் வில்லிவாக்கம் சுப்புலட்சுமி, எல்லாபுரம் நந்தகோபால், திருவள்ளூர் விநாயகம், செங்குன்றம் பாயாஸ், மாத்தூர் அருண்குமார், கோதண்டன், அரண் கலையரசன், பாஸ்கர் நேதாஜி, கோபி, ரோஸ், ஆனந்தன், பச்சையப்பாஸ் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: