சட்டப்பேரவை தேர்தலில் நமக்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே தான் போட்டி: விஜய் பேச்சு

சென்னை: தவெக வேட்பாளர்கள் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் அக் கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: எல்லா இடத்திலும் நான் போய் நிற்க முடியாது என்பதால் வேட்பாளர்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். இந்தத் தேர்தல் இருமுனைப் போட்டி மட்டும்தான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் மட்டும்தான் தேர்தல் என்று விஜய் பேசினார்.

போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு. போதைப்பொருளைத் தடுக்க கடும் சட்டங்கள் கொண்டு வரப்படும், விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்படும், 12ம் வகுப்புக்கு பிறகு பி.ஹெச்.டி வரை பிணையம் இல்லாமல் 20 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படும், 29 வயதுக்கும் மேல் வேலைவாய்ப்பு இல்லாத டிகிரி முடித்த இளைஞர்களுக்கு 4000 ரூபாயும் பாலிடெக்னிக் முடித்த இளைஞர்களுக்கு மாதம் 2000 ரூபாயும் இளைஞர் நல நிதியாக வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது,

* ‘புதிய சகபாதப்தம்’- அதிரவைத்த புஸ்ஸி தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர்
புஸ்ஸி ஆனந்த் பேசுகையில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள், தத்தளிப்புகள் காணப்பட்டது. உச்சமாக அவர், ‘‘நமது தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசினில் ஒரு புதிய சகபாதப்தத்தை படைக்க நாம் இங்கே கூடியிருக்கிறோம்…’’ என்று பேசிக்கொண்டு போனார். இதைக்கேட்டு எல்லோரும் திகைத்தனர். பிறகு அவர் சொல்ல வந்தது, ‘சகாப்தம்’ என்பதை ஒருவாறாக புரிந்துகொண்டனர்.

* தடாலென்று விஜய்யின் காலில் விழுந்த வேட்பாளர்
விஜய் ஒவ்வொரு வேட்பாளராக அறிவித்து வந்தார். அப்போது, ராயபுரம் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள விஜய் தாமு என்பவர் தனது பெயரை அறிவித்தவுடன் நேரடியாக வந்து விஜயின் காலில் விழுந்தார். இவர் அக்கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளராக பொறுப்பில் உள்ளார்.

இவர் தனக்கு தென்சென்னைக்குட்பட்ட வேளச்சேரி அல்லது வேறு ஏதாவது தொகுதி வேண்டும் என்று கட்சியிடம் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு நேற்று முன்தினம் இரவு வரை தொகுதியை ஒதுக்காமல் காத்திருக்க வைத்துள்ளனர். இறுதியாகத்தான் அவருக்கு ராயபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் அவர் விஜயின் காலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: