செங்கல்பட்டிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்பதர்கூடம், சதுர்ப்புஜ ராமர் திருக்கோயில். இத்தலத்தில் திருமாலைப்போல் நான்கு கரங்களுடன் மார்பில் மகாலட்சுமியுடன் அருள்கிறார் ராமர். தல தீர்த்தம் சேஷ தீர்த்தம் என்றும், தேவராஜ புஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது. வைகானஸ ஆகம விதிப்படி ஆலயத்தில் வழிபாடுகள் நடக்கின்றன. தர்மதிஷ்டர் எனும் முனிவருக்கு விதி வசத்தால் ஏற்பட்ட சரும நோய் இத்தல ராமர் அருளால் நீங்கியது.
அதனால் சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு நேர்ந்து கொண்டு, குணமடைந்தபின், திருமஞ்சனம் செய்து, வஸ்திரம், துளி மாலை சாத்தி கல்கண்டு நிவேதித்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர். பொங்கலன்று பரிவேட்டைக்குச் செல்கிறார் இத்தல ராமர். சூரிய குலத்தில் ராமர் தோன்றியதன் நினைவாக இத்தலத்தில் இந்நிகழ்வு நடைபெறுகிறது.
ஒற்றுமை
தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையில் உள்ள முருகன் சிவ, சக்தியாகிய ஜம்புலிங்கேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோயிலைச் சுற்றிலும் உள்ள கல்தூண்களில், ராமர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் உருவங்கள் பொறித்த நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் உள்ளன. இந்த மாதிரி சைவத்திருக்கோயிலில் வைணவ அடையாளங்கள் வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாது.
ராமேஸ்வரர்
தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் இக்கோயில் சதுரமாக வடிவமைக்கப்பட்டு நான்கு புறங்களிலும் கோபுரங்கள் உள்ளன. கடற்கரை திருத்தலத்தில் 24 விசேஷ தீர்த்தங்கள் உள்ளன. ஸ்ரீராமர், இராவணவதம் முடித்துத் திரும்புகையில் ஸ்ரீசீதாதேவி சமேதராக கடற்கரையில் மணல் லிங்கம் வடிவமைத்து வழிபட்ட இடம் ராமேஸ்வரம் என அழைக்கப்படுகிறது.
அயோத்தி
ஸ்ரீராமரின் அவதார தலம். சரயூ நதிக்கரையில் உள்ளது. இத்தலத்தை கோலாபுரம் என்றும் தர்ப்பசயன மந்திரம் என்றும் அழைக்கின்றனர். தசரதரும், ராமரும் நீராடிய துறை ராஜ்காட் என அழைக்கப்படுகிறது. தேவர்கள் அனைவரும் இங்கே பிறக்க ஆசைப்படுவதாக கம்பர் தன் ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சபரிமலை
ராமனின் தரிசனத்திற்காக சபரி எனும் வேடுவ குலப்பெண்தான் ருசிப்பார்த்து நல்ல சுவையுள்ள கனிகளை ராமனுக்கு அளித்து தன் அன்பை வெளிப்படுத்திய தலம்.
சித்ரகூடம்
ராமனும் பரதனும் கானகத்தில் சந்தித்த இடம். அலகாபாத் அருகே உள்ளது. ராமர் தன் வனவாசத்தின் முதல் ஆண்டைக் கழித்த இடம் இது. இதை காமத்கிரி என்றும் அழைப்பர். குகன் கங்கையைக் கடக்க தன் ஓடத்தில் ஏற்றிச் சென்று உதவிய இடமும் இதுவே.
ரிஷிகேஷ்
பத்ரிநாத், கேதார்நாத் ஆலயங்களுக்குச் செல்லும் வழியில் ரிஷிகேஷ் உள்ளது. ராவண வதம் முடிந்ததும் ராமர் தேவப்ரயாகையில் தவம் செய்த இடத்தில் ராமருக்கு தனி ஆலயம் உள்ளது.
பூதப்பாண்டி
ராவண சம்ஹாரத்திற்குப் பிறகு சீதையுடன் ராமன் அயோத்திக்குத் திரும்பினார். அப்போது போகும் வழியில் தனக்கு ஆதரவளித்தவர்கள், உதவியவர்கள் அனைவரையும் மீண்டும் சந்தித்து நன்றி நவின்றார். அப்படி அவர் இறங்கிய தலங்களில் ஒன்றுதான் பூதப்பாண்டி.
ராமேஸ்வரம்
சீதை சிறைபிடிக்கப்பட்டிருக்கும் இடம் தெரிந்துவிட்டது. அது இலங்கை. அங்கே போக குறுக்கீடாக இருந்த கடல் மீது ராமன், தன் படையினருடன் பாலம் கட்டினான். அவ்வாறு பாலம் ஆரம்பித்த இடம் இதுதான்.
அனந்தபத்மநாபன்
