இன்று முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை சுற்றுப்பயணம் மயிலாப்பூரில் இன்று எடப்பாடி பிரசாரம்

சென்னை: அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அதிமுக சார்பிலும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 25ம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, 25ம் தேதி (இன்று) – மாலை 3.30 மணிக்கு மயிலாப்பூர், 27ம் தேதி மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம் – ஆலந்தூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் – தாம்பரம், 28ம் தேதி மாலை சென்னை மாவட்டம் – ஆர்.கே.நகர், திருவள்ளூர் மாவட்டம் – திருவொற்றியூர், 29ம் தேதி மாலை கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவில், திருநெல்வேலி மாவட்டம் – ராதாபுரம், 30ம் தேதி மாலை தென்காசி மாவட்டம் – கடையநல்லூர், தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி, 31ம் தேதி மாலை விருதுநகர் மாவட்டம் – சிவகாசி, ராமநாதபுரம் மாவட்டம் – பரமக்குடி, ஏப்ரல் 1ம் தேதி மாலை சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டம் – புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: