சொன்னாரு..! செஞ்சாரு..!! சிலம்பம் வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு

சொன்னாரு: 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டமன்ற மானியக் கோரிக்கையில், ‘‘சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கும் 3% இடஒதுக்கீடு விரிவாக்கம் செய்யப்படும்’’ என்ற அறிவிப்பை அப்போதைய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார்.

செஞ்சாரு: விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற வீரர்களுக்கும் சாதனை படைத்தவர்களுக்கும் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில் பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பவானிதேவி (வாள்சண்டை), தருண் (தடகளம்), லஷ்மண் ரோஹித் மரடாப்பா (படகோட்டுதல்), தனலட்சுமி, (தடகளம்), வி. சுபா (தடகளம்) மற்றும் மாரியப்பன் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பத்தையும் 3 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்குமாறு சிலம்பம் கற்கும் மாணவர்களும், கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளர்களும் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில் திமுக அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சிலம்பம் சேர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல அப்போதைய துறை சார்ந்த அமைச்சர் மெய்யநாதனும் இன்னும் சில நாட்களில் அரசாணை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, தமிழக வேலைவாய்ப்பில் சிலம்பம் வீரர்களுக்கான 3% இடஒதுக்கீடு குறித்த அரசாணை 2021ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி அன்று தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதில், ‘‘மேற்படி திட்டத்தின் கீழ் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி ஆகிய விளையாட்டுக்களையும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டினை 3 விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டு அதற்கான அரசாணை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மூலம் ஆணையிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியின் கீழ், ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருமளவில் பயன் பெறுவதன் மூலம் தமிழினத்தின் பழங்கால தற்காப்புக் கலைகளில் சிறப்பு மிக்க சிலம்பம் விளையாட்டிற்கு மாபெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்’’ என குறிப்பிட்டிருந்தது.

வேலைவாய்ப்பு மட்டுமின்றி, மருத்துவப் படிப்பு, பொறியியல் போன்ற தொழில்முறை படிப்புகளுக்கான சேர்க்கையிலும் இந்த 3% விளையாட்டு கோட்டா பொருந்தும். ஒன்றிய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்டத்திலும் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய அளவிலான அங்கீகாரம் சிலம்பம் வீரர்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் சிலம்பம் தொடர்பான பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) மற்றும் சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

* தேர்தல் கவுண்டவுன் வாக்கு பதிவுக்கு30 நாட்கள்
தலைவர்கள் இன்று…
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்) மயிலாப்பூர்
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்) சென்னை
வைகோ (மதிமுக
பொதுச்செயலாளர்) சென்னை
நயினார் நாகேந்திரன் (பாஜ தலைவர்) சென்னை
பெ.சண்முகம் (சி.பி.எம்.மாநில செயலாளர்) சென்னை
மு.வீரபாண்டியன் (சி.பி.ஐ.மாநில செயலாளர்) சென்னை
திருமாவளவன் (வி.சி.க தலைவர்) சென்னை
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்) சென்னை
அன்புமணி
(பாமக தலைவர்) சென்னை
ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்) சென்னை
சீமான் (நாதக
ஒருங்கிணைப்பாளர்) கிருஷ்ணகிரி
டி.டி.வி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்) சென்னை
விஜய் (தவெக தலைவர்) பெரம்பூர்

* அதிமுகவில் பெருசுகள் ஜோலியை முடிக்க பிளான் பி திட்டம்
கோவை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜவில் முக்கிய வேட்பாளர்களுக்கு எதிராக அதே பெயரில் பல வேட்பாளர்களை களமிறக்க போகிறார்களாம். இதை மாற்று கட்சியினர் செய்ய போறதில்லையாம். அதே கட்சிகளை சார்ந்தவர்கள் ‘பிளான் பி’ என்ற பெயரில் இதை செய்ய காத்திருக்கிறார்களாம். கட்சியில் ஏற்கனவே சீட் வாங்கியவர்கள் மறுபடியும் சீட் வாங்குவார்கள். நாங்கள் எப்போதும் போல் அவர்களுக்கு வேலை செய்ய வேண்டும். அம்மா ஆட்சி காலத்தில் இப்படியா நிலைமை இருந்தது என அதிமுகவில் பரவலாக கேட்கிறார்களாம்.

குறிப்பாக எஸ்பி வேலுமணி, அம்மன் அர்ஜூனன், பிஆர்ஜி அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், பொள்ளாச்சி ஜெயராமன், மேட்டுப்பாளையம் செல்வராஜ் ஆகியோர் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்கள். இவர்கள் யாருக்கும் தொகுதியை விட்டு தருவதில்லை என கட்சியின் அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் புலம்பி வருகிறார்கள். அதுவும் இளைஞர்களுக்கு சீட் தராமல் முடக்கி விட்டு 65 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு சீட் தருவதாக அதிமுகவில் கடும் அதிருப்தி காட்டுகிறார்கள். எனவே, ஒரே பெயரில் பலரை போட்டியாக வேட்பாளர்களை நிறுத்தி தோற்கடிக்க உள்ளடி திட்டத்தை தயார் செய்து வருகிறார்கள்.

Related Stories: