இப்தார் நிகழ்ச்சியில் தேர்தல் விதி மீறல் பரிசுப்பொருள் வழங்கியதாக ஆதவ் அர்ஜூனா மீது புகார்: தேர்தல் ஆணையத்திடம் வழக்கறிஞர் மனு

சென்னை: தேர்தல் விதிமுறை மீறி இப்தார் நிகழ்ச்சியில் பரிசுப் பொருள் வழங்கப்பட்டுள்ளதற்கான வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணைய அதிகாரியிடம் வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் விஜய் இப் புகார் மனுவை அளித்துள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில், தவெக வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளரான ஆதவ் அர்ஜூனா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.5,000 மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இவ்விவகாரம் குறித்து தவெக தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: