புதுடெல்லி: விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்காக 5 நிமிட ஸ்மார்ட் யோகா வழக்கத்தை ஆயுஷ் அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் நடந்த யோகா மகோத்சவம் 2026ன் போது ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் 5 நிமிட ஸ்மார்ட் யோகா என்னும் புதுமையான முயற்சியை தொடங்கிவைத்தார். மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த நெறிமுறையானது அடிக்கடி விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நடுவானில் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு ஒரு விரைவான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியை வழங்குகின்றது. மிக கவனமாக வடிவமைக்கப்பட்ட இந்த யோகாவானது விமான பயணத்தின்போது பின்பற்றக்கூடிய 5 நிமிட ஆரோக்கிய நெறிமுறையாகும்.
