எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் நிறுவன சட்ட திருத்த மசோதா கூட்டுக்குழு ஆய்வுக்கு பரிந்துரை

புதுடெல்லி: இந்தியாவில் தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், சிறு நிறுவனங்களின் பணிச்சுமையைக் குறைக்க வழிவகை செய்யவும் நிறுவன சட்டங்கள் திருத்த மசோதா 2026-ஐ ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதன்படி சிறு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் சிறிய அளவிலான விதிமீறல்களை குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து விடுவித்து எளிமையாக்கப்பட உள்ளன. குறிப்பிட்ட வகை நிறுவனங்களுக்கு கட்டாய சிஎஸ்ஆர் (சமூக பொறுப்புணர்வு) கடமைகளில் இருந்து விலக்கு அளிக்க மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்களான மணீஷ் திவாரி (காங்.), சவுகதா ராய் (திரிணாமுல் காங்.), தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர். நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் 2 சதவீதத்தை பெருநிறுவன சமூக பொறுப்பிற்காக கட்டாயமாக செலுத்த வேண்டும் என்ற சட்டத்தின் விதிகளை இந்த சட்டம் நீர்த்துப் போகச் செய்வதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, விரிவான ஆய்வு நடத்த கூட்டுக்குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

Related Stories: