அதிகாரி தற்கொலை பஞ்சாப் முன்னாள் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் கைது

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பஞ்சாப் மாநிலக் கிடங்கு நிறுவனத்தின் மாவட்ட மேலாளரான ககன்தீப் சிங் ரந்தாவா, கடந்த சனிக்கிழமை அதிகாலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப் அமைச்சர் லால்ஜித்சிங் புல்லரால் தான் துன்புறுத்தப்படுவதாக அவர் கூறியதாகக் கருதப்படும் ஒரு காணொலி வெளியானது. இதையடுத்து புல்லர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இதை தொடர்ந்து சனிக்கிழமை இரவு, அமிர்தசரஸ் காவல்துறை புல்லர் மீதும், அவரது தந்தை சுக் தேவ் சிங் புல்லர் மீதும், தனிப்பட்ட உதவியாளர் தில்பாக் சிங் மீதும் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் நேற்று முன்னாள் அமைச்சர் லால்ஜித்சிங் புல்லர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: