ஆந்திரா ரேஷன் கடைகளில் மீண்டும் மண்ணெண்ணெய்: அமைச்சர் தகவல்

 

திருமலை: ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் நாதென்ல மனோகர் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், விஜயவாடா கண்ணூர் உணவு பொருள் வழங்கல் பவனில் நேற்று உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் நாதென்ல மனோகர் நிருபர்களுக்கு பேட்டியில் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் எங்கும் எரிவாயு பற்றாக்குறை இல்லை. குறிப்பாக வீட்டுத் தேவைகளுக்கு எரிவாயு பிரச்னையின்றி சீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது வணிகத் தேவைகளுக்குப் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. மருத்துவமனைகள், பள்ளிகள், விடுதிகள் மற்றும் அவசரகால சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து வணிகத் தேவைகளுக்கான எரிவாயுவை வழங்கி வருகிறோம்.

ஆந்திரப் பிரதேசம் ஏற்கனவே மண்ணெண்ணெய் இல்லாத பகுதியாக ஆக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அதை மீண்டும் பயன்பட்டுக்கு கொண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் இது மலைப்பிரதேச பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் முதற்கட்டமாக ரேஷன் கடைகள் மூலம் குடும்பத்துக்கு தலா ஒரு லிட்டர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: