டெல்லி: மத்திய கிழக்குப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சரிசெய்ய, ரஷ்யா மற்றும் ஜப்பானிடம் இருந்து எல்பிஜி இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அந்நாடுகளிடம் இருந்து ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவுக்கு எல்பிஜி இறக்குமதி செய்யப்பட உள்ளதாக தகவல். இந்தியா தனது 60% எல்பிஜி தேவையை இறக்குமதி மூலமே பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
