சென்னை, : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்ந்து அதிமுக- பாஜ இடையே பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மதியம் 12 மணிக்கு சென்னை வர உள்ளார். இன்று மாலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது பாஜவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது தகவல் தெரிய வரும்.
இதற்கிடையே, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அளித்த பேட்டி: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் டெல்லிக்குச் செல்வதில் என்ன தவறு வந்துவிட்டது? டெல்லியில் வைத்து எவ்வித கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இன்று (சனிக்கிழமை) மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார். அவர் வந்தவுடன், கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்குவோம். நான் டெல்லிக்குச் செல்லவில்லை. எங்கள் தரப்புப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சென்னையில் தான் நடைபெறும்.
