சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4வது நாளாக நேர்காணல்

 

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 4வது நாளாக நேர்காணல் நடத்தினார். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்குட்பட்ட 21 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. சுமார் 416 பேர் நேர்காணலில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. மாலையில் தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்குட்பட்ட 20 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்தினார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். அவரை தவிர மேலும் 3 பேரும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேர்காணலில் பங்கேற்றனர். திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலு பெயரில் மட்டுமே விருப்ப மனு அளிக்கப்பட்டதாகவும், நேர்காணலில் அவர் ஒருவர் மட்டுமே பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: