கொளுத்துது வெயில் பழநியில் பக்தர்கள் பாதம் காக்க கூடுதல் மேட் விரிக்கப்படுமா?

 

பழநி, மார்ச் 17: வெயில் கொளுத்துவதால் பழநியில் பக்தர்கள் பாதத்தை காக்கும் வகையில் கூடுதலான அளவில் மேட் விரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் துவங்கும் முன்பே தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெறும் கால்களில் நடப்பதால் வெயிலின் சூட்டை தாங்கும் வகையில் மலைக்கோயில் வெளிப்பிரகாரங்களில் தென்னை நார்களினால் செய்யப்பட்ட மேட் விரிக்கப்பட்டுள்ளது.  அடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பகல் நேரங்களில் பக்தர்கள் இதில் வெறும் கால்களில் நடந்து செல்ல முடியாத நிலை நிலவி வந்தது.

Related Stories: