திருமங்கலம், மார்ச் 17: திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி சிவன்நகரை சேர்ந்தவர் மாரியப்பன். உச்சப்பட்டி திமுக கிளை செயலாளர். இவரது மகன் சரவணன்(24). இவர் நேற்று முன்தினம் இரவு சாத்தங்குடியில் இருந்து டூவிலரில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது விருதுநுகர் – மதுரை நான்கு வழிச்சாலையில் திருமங்கலம் செங்குளம் பிரிவு பகுதியில் இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் டூவீலரில் மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த சரவணன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பெற்றோர், அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி
வருகின்றனர்.
