திண்டுக்கல், மார்ச் 17: திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில், எஸ்ஐ கிருஷ்ணகுமார், சிறப்பு எஸ்ஐ சேகர் மற்றும் போலீசார் பொன்மாந்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காளியம்மன் கோவில் பின்புறம் சட்ட விரோதமாக மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சங்கர் (56) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
