தை அமாவாசையை முன்னிட்டு திருப்புவனத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திருப்புவனம், பிப்.12: கொரோனா தடையால் திருப்புவனம் வைகை ஆற்றில் திதி மற்றும் தரப்பணம் செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. கொரோனா தடை தளர்வால் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு வைகை ஆற்றில் ஏராளமானோர் திரண்டு முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். தை அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர்-செளந்திரநாயகி அம்பாள் கோயிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தனர். பின்னர் கோயிலில் வழிபட்டனர். புரோகிதர்கள் அங்காளீஸ்வரன், ரங்கராஜன் சவுந்தரராஜன், கார்த்தி ஆகியோர் பித்ரு பூஜைகளை நடத்தினர். இதேபோல் காளையார்கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு யானைமடு தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

Related Stories: