அரசு சொத்துக்கள், வாகனப் பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடு எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு

நாகர்கோவில், மார்ச் 17: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசு வாகனங்கள் மற்றும் கட்டிடங்களைப் பயன்படுத்துவது குறித்துத் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்களின் அலுவலகங்கள் உடனடியாகப் பூட்டப்பட்டு, அதன் சாவிகள் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசு வாகனங்களைப் பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரியத் தலைவர்கள் வசம் உள்ள அரசு வாகனங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். அரசு விருந்தினர் மாளிகைகளை அரசியல் கட்சியினர் எவரும் தங்குவதற்கோ அல்லது ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கோ பயன்படுத்தக் கூடாது. நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒழுகினசேரியில் நாகர்கோவில் சட்டமன்ற ெதாகுதி எம்எல்ஏ அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: