ஈமு கோழி மோசடி வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வந்து தப்பியவருக்கு பிடிவாரண்ட்

கோவை, பிப்.11: ஈரோடு பெருந்துறை கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் அதே பகுதியில் ஈமு கோழி பண்ணை நடத்தி வந்தார். இந்த நடந்த மோசடி தொடர்பாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டில் கோவிந்தசாமியை ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை ேகாவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே சிறையில் இருந்த கோவிந்தசாமிக்கு ஜாமீன் கிடைத்தது. இதை தொடர்ந்து சிறையில் இருந்து வெளிேய சென்ற இவர் கோர்ட்டில் வாய்தாவிற்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து டான்பிட் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. கோர்ட் தலைமை எழுத்தர் அளித்த புகாரின் பேரில் ரேஸ்ேகார்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியை தேடி வருகின்றனர்.

Related Stories: