நாமக்கல் நகராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவு முகாம்: பாஸ்கர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

நாமக்கல், பிப்.11: நாமக்கல் நகராட்சி 11, மற்றும் 20 வது வார்டில் நேற்று காலை ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது. இதை பாஸ்கர் எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசினார். குட்டைத்தெரு, சேந்தமங்கலம்ரோடு, ராஜாஜி பள்ளிதெரு, அஜிஸ்தெரு, கந்துமுத்துசாமிதெரு, மலையாண்டி தெரு பகுதியில் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும் அதே பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசு புகைமருந்து அடிக்கும் பணியில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு சுகாதார பணியை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் பிரதான சாலையில், கழிவுநீர் கால்வாய் அகலப்படுத்தும் பணியை எம்எல்ஏ பார்வையிட்டார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், சுகாதார அலுவலர் சுகவனம், நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சாதிக்பாட்சா, லியாகத்அலி, கூட்டுறவு வங்கி தலைவர், பொரிசண்முகம், விஜயகுமார், சுரேஷ், திலிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: