உடுமலை: உடுமலை ஆர்கேஆர் கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு பயிலும் மாணவன் எஸ்.ஆர்.சேன் ஜெரோம், கலாம் உலக சாதனையாளர் விருது பெற்றுள்ளார். சங்க இலக்கியமான கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டு நூலில் இடம்பெற்றுள்ள 99 பூக்களின் பெயர்களை 30 விநாடிகளில் கூறி சாதனை படைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது. மாணவனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, வேளாண்மை துறை இணை இயக்குநர் கந்தசாமி, ஆர்கேஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலர் கார்த்திக்குமார், பள்ளி முதல்வர் மாலா ஆகியோர் பாராட்டினர்.
