சென்னை: இந்தியாவுக்கே வழிகாட்டும் மகளிர் நலத்திட்டங்கள் மென்மேலும் தொடர, முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை அனைவரும் இணைந்து வலுப்படுத்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி: சமூகத்தின் அடிமை விலங்குகளை உடைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
பெண்களுக்கான திட்டங்களைச் சலுகைகளாக அல்லாமல், உரிமைகளாக்கி-\\”வெல்லும் தமிழ்ப்பெண்கள்\\” என வீறுநடைப் போட செய்திருக்கிறது நம் திராவிட மாடல் அரசு. இந்தியாவுக்கே வழிகாட்டும் மகளிர் நலத் திட்டங்கள் மென்மேலும் தொடர, முதல்வர் மு.க.ஸ்டாலின் கரத்தை அனைவரும் இணைந்து வலுப்படுத்துவோம். மகளிர் உயர மாநிலம் உயரட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
