ஓசூர் அருகே ஆகிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட வீட்டை இடித்து அகற்ற முயன்றபோது வீட்டின் உரிமையாளர்கள் குழந்தைகளுடன் தீக்குளிப்போம் என மிரட்டல்

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கெலமங்கலம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடித்து அகற்றப்பட்டன. அப்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த 2 மாடி வீட்டை அதிகாரிகள் இடிக்க முயலும் போது, வீட்டின் உரிமையாளர்கள் குழந்தைகளுடன் மாடியில் ஏறி தீக்குளிப்போம் என மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை வரவழைத்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்கள் கால அவகாசம் கேட்டதை அடுத்து, அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர்.

Related Stories: