தேமுதிக தொடங்கி 21 ஆண்டுகளுக்கு பிறகு எல்.கே.சுதீஷ் மாநிலங்களவை எம்பியாகிறார்

சென்னை: தேமுதிக தொடங்கப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு எல்.கே.சுதீஷ் மாநிலங்களவை எம்பியாகிறார். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. இதில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார். இவர் பிரேமலதாவின் தம்பி. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமம் தான் சுதீஷின் சொந்த ஊர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர் சுதீஷ்.

இவரது அப்பா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அலுவலராக பணியாற்றியவர். விஜயகாந்த் நடித்த பல திரைப்படங்களை சுதீஷ் தயாரித்துள்ளார். விஜயகாந்த் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது தொடங்கி அவருக்கு பக்கபலமாகச் செயல்பட்டு வந்தார். 2005ல் தென்​சென்னை மாவட்​டத்​தின் தலை​மைப் பொதுக்​குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2006 சட்​டசபை தேர்​தலில் குடி​யாத்தம் தொகுதியில் போட்​டி​யிட்​டார்.

அந்த தேர்​தலுக்குப் பின் எல்.கே.சுதீஷை இளைஞர் அணி செய​லா​ள​ராக நியமிக்கப்பட்டார். 2009 மக்களவை தேர்தலில் கள்​ளக்​குறிச்​சி​யிலும், 2014 மக்களவை தேர்தலில் சேலத்​தி​லும் போட்டியிட்டார். கடந்த 2017ல் தேமுதிகவின் துணைப் பொதுச்​ செயலா​ளராக நியமிக்கப்பட்டார். 2019ம் ஆண்டில் மீண்​டும் பாஜ கூட்​ட​ணி​யில் தேமுதிக சார்பில் கள்ளக்​குறிச்​சி​ தொகுதியில் போட்​டி​யிட்​டார். தொடர்ந்து கடந்த ஆண்டு தேமுதிக பொருளாள​ராக நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில், ராஜ்யசபா உறுப்பினராக டெல்லி செல்ல இருக்கிறார் சுதீஷ்.

21 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தேமுதிகவை சேர்ந்தவர் மாநிலங்களவை உறுப்பினராகிரார். தேமுதிகவை கடந்த 2005 செப்டம்பரில் தொடங்கினார் விஜயகாந்த். கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளிலேயே தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தாலும், இதுவரை நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை. இந்நிலையில் தான் கட்சி தொடங்கி 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மாநிலங்களவைக்கு தேமுதிக சார்பாக செல்ல இருக்கிறார் எல்.கே.சுதீஷ்.

Related Stories: