இந்திய நாட்டின் ஒற்றுமையை பேணி காத்திட பணியாற்றுவோம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: இந்திய நாட்டின் ஒற்றுமையை பேணி காத்திட தொடர்ந்து பணியாற்றுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு: ஜனநாயகத்தை காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்.

மக்களின் நம்பிக்கையை பெற்று, தமிழ்நாட்டில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் நமது கூட்டணி சார்பில், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவை சேர்ந்த எல்.கே.சுதீஷ் ஆகியோர் கூட்டணி கட்சியினருடன் மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நமது அரசியல் சட்ட விழுமியங்களையும் இந்திய நாட்டின் ஒற்றுமை – பன்மைத்துவம் ஆகிவற்றையும் பேணி காத்திட தொடர்ந்து பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: