மேற்கு வங்க மாநிலம் கூச் ஹெகாரில் நடந்த பிரசார கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பேசுகையில், ‘எஸ்ஐஆருக்கு பிறகு வெளியிடப்பட்ட மேற்கு வங்க இறுதி பட்டியலில் 63.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது. நீக்கப்பட்டவர்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஊடுருவல்காரர்கள். இவர்கள்தான் இதுவரை மேற்கு வங்க மக்களுக்கான வேலை வாய்ப்பை பறித்தவர்கள். சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை பாதுகாப்பவர்தான் முதல்வர் மம்தா பானர்ஜி.
ஊடுருவல்காரர்களுக்கு போலி ஆவணங்களைப் பெற உதவி செய்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தார். வாக்காளர் பட்டியலில் ஊடுருவல்காரர்களின் பெயர்களை நீக்காமல் இருக்க மம்தா பானர்ஜி நீதிமன்றங்களுக்கு விரைந்தார். ஏனெனில் அவர்கள் அவரது கட்சியின் வாக்கு வங்கி. இந்த ஊடுருவல்காரர்களுக்காக, நீங்கள் நள்ளிரவில் நீதிமன்றங்களை கூட அணுகுகிறீர்கள். ஆனால், பெண்கள் அவமானத்தை எதிர்கொள்ளும்போது, நீங்கள் உங்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வது ஏன்?’’ என்றார்.
